சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, May 28, 2010

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

(சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்)

நோக்கம்: உயர் தனிச் செம்மொழியாம் தமிழை உலகெலாம் கொண்டு செல்லுதல்

செயல்முறை: மாதம் ஒரு சங்க இலக்கியக் கூட்டம் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாலை 6 மணிக்குத் தொடங்கி 7.30 மணிக்கு நிறைவு பெறும்.

இவ்வமைப்பு அரசியல், சமயம், மதம் ஆகிய கட்டுகளுக்குள் அடங்காது, சங்க இலக்கியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது.

சங்க இலக்கியம் எனப்பெறும் பதினெண் மேல்கணக்கு மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியம் எனப்பெறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெருமை, வரலாறு, ஒப்பாய்வு, இலக்கிய நுட்பம் போன்றவற்றை முத்தமிழில் (சொற்பொழிவு, நாடகம், இசை) வெளிப்படுத்த, பொது மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பெறும்.

முன்னுரையாக ஒருவர் ஐந்து மணித்துளிகள் முதல் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அறிமுக உரை நிகழ்த்துவார். தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளர் ஒரு மணி நேரம் முதல் ஒன்றே கால் மணி நேரம் வரை உரை நிகழ்த்துவார். சிறப்புச் சொற்பொழிவாளரின் உரை முடிந்தவுடன் ஒரு நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுக்கு வரும்.

அமைப்பு முறை:

இந்தச் சங்க இலக்கிய கூட்டத்தில் தமிழைத் தவிர வேறு ஒன்றின் புகழ் பாடுவதில்லை.

ஆசிரியர் குழு:

சொற்பொழிவை ஆய்ந்து அதனைப் பதிப்பிற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என ஆய்ந்து அறிக்கை கொடுக்க நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் தமிழறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தமிழறிஞர் குழுவின் மேலான வழிகாட்டுதலில் தொடர்ந்து செயல்கள் மேற்கொள்ள்ப் பெறும்.

சொற்பொழிவு தேர்வு முறை:

ஒவ்வொரு பேச்சாளரும் தட்டச்சு செய்யப் பெற்ற அல்லது தெளிவாகக் கையால் எழுதப்பெற்ற சொற்பொழிவுத் திரட்சியை (கட்டுரையை) அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். ஆண்டுக்கொருமுறை இச்சொற்பொழிவுகள் அட்ங்கிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பெறும்.

பைந்தமிழ்ச்சோலை பணிகள்:

சங்கப் பணிகள் பின்னாளில் தேவைக்கேற்ப மேலும் விரிவு செய்யப்பெறும்.

கட்டணம்:

உறுப்பினர்களுக்கென்று தனிக் கட்டணம் எதுவும் இல்லை. பெயர் , இருப்பிட முகவரி, மற்றும் கைப்பேசி எண் ஆகியவை மட்டும் பெறப்படும். உறுப்பினர்களின் பெயர்கள் வலைப்பதிவில் இடம்பெறும்.

- பொதுச்செயலாளர்.


தொடர்பு க்கு
ப. பானுமதி
18/3, லோடஸ் ஆர்கெட்
ரத்னா நகர்
விருகம்பக்கம்
சென்னை- 600 092.
தமிழ்நாடு
இந்தியா.
கைப்பேசி- 99412 98850

மின்னஞ்சல்
neithalcholai@gmail.com
innilaa.mullai@gmail.com

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment