நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் இருபதாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 06/11/11 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் ஆறரை மணிக்குச் சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.
விழாவின் துவக்கத்தில் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர் புலவர். பா. மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவாளரையும் சோலையின் நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை புரிந்திருந்த உதயா என்றழைக்கப்படும் உடையார் ராஜேந்திராவையும் அறிமுகமும் செய்து வைத்தார்.
அடுத்த நிகழ்வாகப் பைந்தமிழ்ச்சோலையின் நிறுவனத் தலைவர். பெரும்புலவர் முனைவர். சி. வெ. சுந்தரம் அவர்கள் முன்னுரையாகச் சோலையில் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஓர் சிற்றுரையை ஆற்றினார்.
அடுத்த நிகழ்வாக சிறப்புச் சொற்பொழிவாளர் நிறுவனத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
நிறுவனத்தலைவர் சிறப்புச் சொற்பொழிவாளருக்கும் இன்றைய மற்றொரு சிறப்பு விருந்தினராக சோலையின் நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை புரிந்திருந்த உடையார் ராஜேந்திராவுக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் பா. மோகன கிருஷ்ணன் கலித்தொகையில் அமைந்த அகக்காட்சிகளின் மூலம் கலித்தொகையில் எடுத்துக்குறப்பெற்ற அறச்செய்திகளை அழகு தமிழில் சொற்படமாகத் தந்தார்.
அடுத்த நிகழ்வாக பாவலர். மா. வரதராசன் அவர்கள் தாம் சிந்துப்பாவில் அமைத்த இசைக் கவிதைகள் இரண்டைப் பாடிக்காட்டினார்.
வினா நேரத்தில் பொதுச்செயலாளர் ப. பானுமதியால் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகப் பதில் சொல்லப்பட்ட ஐவருக்குப் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டர் இளவல் பாலாஜி இன்சுவை பணியங்களை வழ்ங்கினார்.
அடுத்து முறையான நன்றியுரை பேரா.முனைவர். சேதுராமலிங்கம் அவர்களால் வழ்ங்கப்பட்டு விழா நிறைவுற்றது.. விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்ட பின் அனைவரும் இனிதே கலைந்தனர்.
0 comments:
Post a Comment