சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Wednesday, June 9, 2010

மூன்றாம் முழக்கத்தின் அறிக்கை..

http://t2.gstatic.com/images?q=tbn:qYcCO-m_bpotmM:http://www.partydelights.co.uk/images/balloons/foil/foil3g.jpg
செந்தமிழ் முழக்கம் - 3 நாள்: 06/06/2010


நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் மூன்றாம் முழக்கம் 06.06.2010 அன்று தமிழ்நாடு, சென்னை, கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது. விழாவில் பணி நிறைவு பெற்ற மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சேதுராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். முழக்கத்தைச் செவி மடுக்க பொதுமக்கள் சுமார் அறுபது பேர் வருகை புரிந்து இருந்தனர். நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் செயலாளர் ப. பானுமதி முறையான வரவேற்புரையுடன் முழக்கத்தைத் தொடங்கி வைத்தார். முழக்கத்திற்குப் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் புலவர் தங்க ஆறுமுகனார் முன்னிலை வகித்தார். அவர் சங்க இலக்கியங்களின் சிறப்பு குறித்தும் நெய்தலங்கானல் என்ற நிலப்பாகுபாட்டின் பெயர்க்காரணம் குறித்தும் சிற்றுரை நிகழ்த்தினார். பின்பு சிறப்புப் பேச்சாளர் முனைவர் சேதுராமலிங்கம் அவர்கள் சொற்சுவை குறித்து நீண்ட உரை நிகழ்த்தினார். முழக்கத்தின் இடையில், வருகை புரிந்தோருக்கு இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டன. இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ப. பானுமதி முறையான நன்றியுரையும் அடுத்த கூட்டத்தின் அறிவிப்பும் கூற விழா இனிதே நிறைவுற்றது.- பொதுச்செயலாளர்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment