சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Monday, December 13, 2010

முக்கிய அறிவிப்பு

துணைத்தலைவர்  நியமனம்:
12.12.2010 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் செந்தமிழ் முழக்கத்தில் பைந்தமிழ்ச் சோலையின் துணைத்தலைவராக திரு. தஞ்சை வாசன் அவர்களை நிறுவனத் தலைவர் பெரும்புலவர் முனைவர் சி.வெ.சுந்தரம் முன் மொழிந்தார்.  பேராசிரியர். முனைவர். சேதுராமலிங்கம் அவர்கள் அதனைத் வழிமொழிந்தார். அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒருமனதாகத் தஞ்சை வாசன் அவர்களைத் துணைத்தலைவராகத் தேர்ந்து எடுத்தனர். அவருக்கு நிறுவனத் தலைவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துச் சொன்னார். 

தஞ்சை வாசன் அவர்களின் சீரிய தொண்டில் இப்பதவி பெருமை  அடையவும்!   மேன்மேலும் உயரவும் இளஞ்சிறுத்தை தஞ்சை வாசன் அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலை அமைப்பாளர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT5ghJAk6dhSZjmHDGDDt8lj6ApDYs8qcvh11zt-fXfbuhr0oM-

- பொதுச்செயலாளர்.


1 comment:

  1. முதலில் சோலையின் அன்பான அனைத்து உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த முதற்கண் வணக்கங்கள்...

    என்னை துணைத்தலைவராக நியமித்த நிறுவனத் தலைவர் பெரும்புலவர் முனைவர் சி.வெ.சுந்தரம் அவர்களுக்கும், அதனைத் வழிமொழிந்த பேராசிரியர். முனைவர். சேதுராமலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அன்பால் என்னை தமிழோடு பிணைத்து இவ்வமைப்பில் சேர்வதற்கும், இப்பொறுப்பை ஏற்பதற்கும் காரணமாக விளங்கும் பொதுச்செயலாளர் ப.பானுமதி அவர்களுக்கும் என்றும் மறவா என் அன்புகலந்த நன்றிகள்.

    இத்தருணத்தில் சோலையின் நோக்கத்தை உலகெங்கும் பரப்புவதிலும், மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் என்பங்கினை அளித்து சோலையின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete