செந்தமிழ் முழக்கம் - 1 (நாள் 08/04/2010)
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கத்தின் முதல் முழக்கம் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வரவேற்புரையை இவ்வமைப்பின் நிறுவனர் சைவ நெறிச் செம்மல், பெரும்புலவர் சி. வெ. சுந்தரம் அவர்கள் நிகழ்த்தினார். இவ்வமைப்பைப் பற்றிய ஒரு குறிப்புரையை இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சங்க இலக்கியம் எவை? சங்க இலக்கியத்தின் அமைப்பு முறைகளான திணை அமைப்பு முறை, முதல், கரு, உரிப்பொருள்கள், சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட அடிப்படை (அடிகளை வரையறையாக) பாடிய புலவர்கள், பெயர் அறியபடாத புலவர்களை அப்பாட்டில் அமைந்த தொடர் அடிப்படையில் பெயரிட்டு அழைத்தமை (உதாரணமாக.. குப்பைக்கோழியார், அணிலாடு முன்றிலார்) பாடல்களின் பொருட் சிறப்பு போன்றவற்றை கேட்போர் மனம் ஏற்கும் வண்ணம் எடுத்துரைத்தார். சிறப்புச் சொற்பொழிவாளர் பேராசியர் அரங்க இராமலிங்கம் அவர்க்ளுக்கு இவ்வமைப்பின் நிறுவனர் முனைவர். சி. வெ . சுந்தரம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். நிறுவனர் முனைவர் சி. வெ. சுந்தரம் அவர்களுக்கு இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். நிகழ்ச்சியின் இறுதியாக இவ்வமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் தாமோதரன் அவர்கள் நன்றியுரை நல்கினார். விழாவுக்கு தமிழறிஞர் குழு உட்பட ஏறத்தாழ் நாற்பது பேர் வருகை தந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இனிப்பும் தேனீரும் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவரிடமும் அவர்களின் மேலான கருத்துரையுடன், முகவரி, மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவு செய்து கொண்டபின்பு இனிதே கூட்டம் கலைந்தது.
- பொதுச்செயலாளர்
0 comments:
Post a Comment