முழக்கம் - 2 (09/05/2010)
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கத்தின் இரண்டாம் முழக்கம் இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச்செம்மல், பெரும்புலவர் சி.வெ. சுந்தரம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கூட்டத்தை முன்னின்று நடத்தியவர் கவிஞர். இளங்கண்ணன் . அவர்கள். கூட்டத்திற்கு அருமையான வரவேற்புரை நல்கிச் சிறப்பித்தவர் இவ்வமைப்பின் தலைவர். கவிஞர். தஞ்சை.ம.பீட்டர். சொற்பொழிவில் சங்க கால மக்களின் வாழ்வியல் சிறப்பைப் பெரும்புலவர் எடுத்துக்கூறினார். இல்லறத்தின் அவசியம், அதனை அக்கால மக்கள் அமைத்துக்கொண்டு கடைப்பிடித்த விதம், கற்பின் மாண்பு கடைக்கோடி விலங்குகளிடமும் கடைப்பிடிக்கப் பட்டு வந்த திறம், அதனை மேற்கோள் காட்டி தவறு செய்யும் தலைவனைத் திருத்தும் தோழி கூற்றுப் பாடல் போன்றவை விளக்கப்பட்டன. கூட்டத்தில் இவ்வமைப்பின் நிறுவனர் முனைவர் சி. வெ. சுந்தரம் அவர்கள், இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களுக்கும், நிதியாளர் பாலகோபாலன் அவர்களுக்கும், தலைமை ஏற்று விழாவைச் சிறப்பித்த கவிஞர் இளங்கண்ணன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார். விழாவின் இறுதியில் தலைவர் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா பூஙகாவில் நடை பெற்றமையால் பூங்காவுக்கு வருகை புரிந்த அனைவரும் ஏற்ததாழ நூறு பேர் வருகை தந்தனர். அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டது. அடுத்த கூட்டத்தின் அறிவிப்புடன் அனைவரும் இனிதே கலைந்தனர்.
- பொதுச்செயலாளர்
0 comments:
Post a Comment